பேக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவும் மயிலை மலர் ஆண்டு விழாவும்

சென்னை: குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எண்ணிலடங்கா எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்து, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மயிலை மலர் இணையதள குழுவின் எட்டாவது ஆண்டு விழாவும் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவும் 05.09.25 அன்று கோடம்பாக்கம் ,அஜந்தா டவர், 'படைப்பு', தரைத் தள அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மதிப்புக்குரிய பத்மபூஷன், கலைமமணி திரு டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் பதினோரு மூத்த எழுத்தாளர்கள் எழுதிய 'இழைகள் இணைத்த துகில்கள்' புத்தகத்தை வெளியிட திருமதி சோபனா ரமேஷ் அவர்களும் திரு. சின்னமுத்து அவர்களும் பெற்றுக் கொண்டனர். மயிலை மலர் 'எழுத்தாளர்களை ஊக்குவித்த பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம்,அவர்கள் எழுதிய 'முத்துச்சிதறல்' என்ற குழந்தைகள் சிறுகதை தொகுப்பை, திருமதி வேதா கோபாலன் வெளியிட பத்மபூஷன் திரு . டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களும் திருமதி ராஜம் சியாமளா, திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களும் பெற்றுக் கொள்...