Posts

Showing posts from September 6, 2021

146 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து MBC 20% இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யாமல் இருக்க அரசை வலியுறுத்தி மாபெரும் பேரணி

Image
  சென்னை, செப்டம்பர் 6, 2021: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் MBC 20% இட ஒதுக்கீட்டில் அரசு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மருத்துவ இடங்கள் தொடர்ந்து கொள்ளை போவதைத் தடுக்கவும், சமூகநீதியைப் பாதுகாக்கக் கோரி சமூகநீதி ஒலி முழக்கம் செய்யவும் இன்று தமிழகத்தில் உள்ள 146 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்களும் இன்று காலை 10 மணி முதல் 1 மணிவரை சென்னை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி ஒலிமுழக்கப் போராட்டம் நடத்தினர்.  இதில் தமிழகம் முழுவதுமிருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள். Youtube Link👇👇 அப்போது அனைத்து மறவர் கூட்டமைப்பின் ஆலோசகர் C. விஜயகுமார் பேசியதாவது : மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான எக்கால சமீபகால சாதிவாரி சமூக, கல்வி நிலைகுறித்த புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 26.2 2021 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்...