ரெட்டி இளைஞர் பேரவை: தமிழகத்தில் ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலிவுறுத்தல்

சென்னை, டிசம்பர் 10, 2020 : தமிழ்நாட்டில் உள்ள 40 லட்சம் ரெட்டியார்கள் அனைவரும் மொழி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். ஓ.பி.ஆர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலைஅமைக்கவேண்டும் : மறைந்த உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க போவதாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு 40 லட்சம் ரெட்டியார் சமூக மக்கள் சார்பில் முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஓ.பி.ஆர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கவேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் பசிக்கு அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவது போல இந்த அரசு எங்களின் கோரிக்கையை கண்டும்,காணாமல்கைகழுவிட்டிருக்கிறது. எனவே உடனடியாக உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் ழுமு உருவ வெண்கலச் சிலையை வரும் 2011 பிப்ரவரி முதல் தேதி அவரின் பிறந்த நாளைக்கு முன்னதாக நிறுவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகள், கொண்டாரெட்டி, கொண்ட காப்பு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் 32 உட்பிரிவைக் கொ...