Posts

Showing posts from February 28, 2022

மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி

Image
சென்னை, பிப்ரவரி 28, 2022: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாநில மையத்தின் சார்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.  Youtube Video👇👇 மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாநில துணைத் தலைவர் த. குப்பன் அனைவரையும் வரவேற்றார். அனைத்து மாவட்டத்தின் பிரதிநிதிகளும் கருத்துரையாற்றினர்.  (L to R) மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம்; மாநில பொருளாளர் ந.ஜெயசந்திரன்; மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன்; பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி; மாநில துணைத்தலைவர் கி.இளமாறன் இறுதியில் கீழ்க்காணும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் அரசு மருத்துவ மனைகள் இணைக்கப்பட வேண்டும். உண்மையான பணமில்லா மருத்துவமாக, இத்திட்டம் நடத்தப்பட வேண்டும். மூன்றாம் தரப்பு, இத்திட்டத்தில் ஈடுபடக்கூடாது. இத்திட்டத்தில் இணையும் உரிமை, இணையாமலிருக்கும...