தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை || புதிய சங்கம் தொடக்கம்
சென்னை, பிப்ரவரி 21, 2021: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 21-02-2021 அன்று சென்னை பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வணிகர் சங்க மூத்த நிர்வாகி திரு. D. பாலகிருஷ்னன் அவர்கள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் K.தேவராஜ், S.சௌந்தர்ராஜன் (ராஜா) P.தேவராஜ், VA.கருனாநிதி, திருநின்றவூர் சாலமோன், ஆரணி L.குமார், ஆலந்தூர் P.கனேசன், நியூராயல் S.பீர் முகமது, பசும்பொன் இரா லெனின், A.ஆல்பர்ட் அந்தோனி, SRP. ராஜன், சுவாமி தேஜானந்த் இவர்கள் முன்னிலையில் நடை பெற்றது. Video👇 இன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலனவர்களின் கருத்தினை ஏற்று வரும் காலங்களில் வணிகர்களை பாதுகாக்க நாம் தனியாக சங்கம் தொடங்குவதென முடிவெடுத்து இயற்றப்பட்ட தீர்மானங்கள். (1) தனியாக சங்கம் தொடங்குவது எனவும், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை என பெயர் வைக்கவும் தீர்மானிக்கப் பட்டது. இதன் அமைப்பாளராக திரு.D, பாலகிருஷ்னன் அவர்களும், தலைவராக S.சௌந்தர்ராஜன் அவர்களும், பொதுசெயலாளராக திரு.K. தேவராஜ் அவர்களும், பொருளாளராக திரு, நியூராயல் S.பீர்முகமது அவர்களும் ஏக மனதாக தேர்ந்தெடு...