அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த அமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜனவரி 12, 2021: அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை புறக்கணித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் தலைவர் பொன்குமார் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அவருடன் அரிமா S.M.முருகானந்தம் தலைவர், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு, மாநிலப் பொ ருளாளர் என்.சுந்தராஜ் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Youtube Video👇👇 அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டு மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜனாதிபத...