Posts

Showing posts from November 22, 2025

கண்ணகி கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Image
சென்னை, நவம்பர் 22, 2025: தமிழர்களின் அடையாளமாக வீற்றிருப்பதும், இலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்த வரலாற்று நிகழ்வுகளை கூறும் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மங்களதேவி கண்ணகி கோவிலை அரசுடைமை ஆக்கி இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்ததாவது: தமிழக–கேரள எல்லையில், சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் சேரன் செங்குட்டுவன் கட்டிய 2,000 ஆண்டுகள் பழமையான மங்களதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமியில் நடைபெறும் விழாவுக்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவிலுக்கு த...