தி ரைஸ் (எழுமின்) அமைப்பு சார்பில் சென்னையில் தமிழர் சங்கமம் | 10ம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு
அனைத்துலகத் தமிழர் பொங்கல் மற்றும் பசுமை பூமி கலை, உணவு, பண்பாட்டுத் திருவிழா! சென்னை, ஜனவரி 2, 2022: தி ரைஸ் (எழுமின்) அமைப்பு எஸ்.ஆர். எம் - பி.ஆர் வர்த்தக குழுமத்தின் ஆதரவுடன் நடத்தும் 10-ம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாடும். தைப்பொங்கல் நிகழ்வுகளும் ஜனவரி 6 முதல் 10 வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தி ரைஸ் (எழுமின்) நிறுவனர் தமிழ்ப்பணி Fr ம.ஜெகத்கஸ்பர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். Press meet youtube video👇👇 ஜனவரி 6,7 நாட்களில் கிண்டி ஹில்ட்டன் விடுதியில் நடைபெறும் அனைத்துலக தமிழ்த்தொழிலதிபர்கள்- திறனாளர்கள் மாநாட்டில் சுமார் 25 நாடுகளிலிருந்து வெற்றித் தமிழர்கள் பங்கேற்கிறார்கள். உலகச் சந்தையில் தமது தொழில் வணிகத்தை விரிவு செய்ய விரும்புவோருக்கு இது அரிய வாய்ப்பாகும். அனைத்துலக தமிழ் பொறியாளர் மாமன்றம் இம் மாநாட்டில் தொடங்கி வைக்கப்படும். தி ரைஸ் (எழுமின்) அமைப்பு உருவாக்கியுள்ள இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் 2000-ற்கும் மேலான பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களுக்குள் அறிவு - அனுபவங்களைப் பகிர்வதும், தாம் நடத்தும்/ பணி செய்யும் நிறுவனங...