தமிழர் விரோத ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேற வேண்டும்! ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!
சென்னை, ஜனவரி 12, 2023: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இன்று (ஜன.12) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஷீத், கட்சியின் சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள் முகமது பிலால், முகமது சலீம், ஹூசைன், ஜூனைத் அன்சாரி, புஷ்பராஜ், மாலிக், சீனிமுகமது, ஜாஃபர், ஜூபைர், செய்யது அகமது மற்றும் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Youtube video👇👇 முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிண...