Posts

Showing posts from August 19, 2024

கேன்சர் மருத்துவமனைக்கு நிதி திரட்ட சென்னையில் கலை நிகழ்ச்சி!

Image
சென்னை, ஆகஸ்ட்  19, 2024: திருப்பூரில் கட்டப்பட்டு வரும் கேன்சர் மருத்துவமனைக்கு நிதி திரட்ட சென்னையில் அக்டோபர் 18, 19, 20 தேதிகளில் நடைபெற இருக்கும் மக்கள் நலன் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு தொடர்பாக  TAMIL NADU MEDICAL COUNCIL HEAD  Dr.A.முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஒரு குழு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்தக் குழுவினர் செய்தியாளரிடம் கூறியதாவது, திருப்பூர் ரோட்டரி கிளப்,  திருப்பூர் சிட்டி முனிசிப்பல் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூரில் சுமார் பல கோடி செலவில் புற்று நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை  திருப்பூரில் கட்டி வருகிறது. இங்கு முற்றிலும் மக்களுக்கு  இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. 17 சிறப்பம்சங்கள் கொண்டு 24 மணிநேரமும் செயல்படும்   அதிநவீன தொழில்நுட்பகள் கொண்ட மருத்துவமனையாக இதை கட்டிவருகிறார்கள்.  தற்போது இந்த மருத்துவ மனையை முழுவதுமாக கட்டி முடிக்க பெரிய அளவில் பணத்தேவை இருப்பதால் மக்களிடயே நிதி திரட்டும் வேளையில் இறங்கியுள்...