Posts

Showing posts from December 30, 2023

பேக்கிடெர்ம் டேல்ஸின் 5 புத்தகங்கள் சிறப்பு விருந்தினர்களுடன் வெளியீட்டு விழா

Image
                      29/12/2023 அன்று கே கே நகரில் உள்ள ஐயப்பன் சாஸ்தா கோவிலில் பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழா வனஜா முத்துக்ருஷ்ணன்,ஜெயந்தி பத்ரி அவர்கள் பாடிய இறை வணக்கத்துடன்ஆரம்பித்தது. விழா தலைவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று குத்து விளக்கு ஏற்றி பின்னர் ருக்மணி வெங்கட் வரவேற்புரை அளித்தார்.  ஜெயந்தி பத்ரி,பார்வதி நாகமணி இருவரும் விருந்தினர்க்கு மரியாதை செய்தனர். முகிழ்நகை,  காவிய நாயகிகள்,  கசங்கிய காகிதம்,  கவின் கலைகள்,  கண்ணாடி  ஆகிய ஐந்து புத்தகங்கள்   திரு ஜே.கே.சிவன்,  எழுத்தாளர் வேதா கோபாலன்,  முனைவர் ஜெயந்தி நாகராஜன்,  திரு கணேஷ் பாலா,  திரு புருஷோத்தமன்      ஆகியோர் தலைமையில் வெளியிடப் பட்டன. Youtube video link 👇   https://youtu.be/3z2GQUdo9Kw?si=pUY3AkJfGovBjDof ஒவ்வொருவரும் அனைத்து எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசி பாராட்டியது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது...