Posts

Showing posts from November 21, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருமாவளவன் ஆதரவு போராட்டம்

Image
சென்னை, நவம்பர் 21, 2022 : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு விடுதலைச்சிறுத்தைகள் அலுவலகத்தில் (நூறடி சாலையில் உள்ள அம்பேத்கர் திடல்) தலைவர்  தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர்   திரு. வேல்முருகன்  அவர்களுடன்  ஊடகவியலாளர்களை    சந்தித்தனர். Press Meet Video👇👇 இந்த கூட்டத்தில்  NLC நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட உள்ள கிராம மக்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு பேரவை தலைவர் கோபாலபுரம் P.மதியழகன் , மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   அப்போது திருமாவளவன் பேசுகையில் இந்த நிலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க இருப்பதாகவும் கூறினார். மேலும்  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு எதிரில் அனைத்து கட்சிகளுடன் போராட்டம் நடத்த போவதாக கூறினார். ****

KRT CAREER ACADEMY சார்பில் TNPSC குரூப் 2 & 2A முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் தொடக்கம்

Image
சென்னை:  KRT CAREER ACADEMY சார்பில் TNPSC குரூப் 2 & 2A முதன்மை தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சியை திரு.உ. சகாயம் ஐ.ஏ.எஸ் (விருப்பஓய்வு)  அவர்கள் 20.11.2022 அன்று தொடங்கி வைத்தார்.  Inauguration Video 👇👇 அது சமயம் அவர் பேசும் போது " இந்த நிகழ்ச்சிக்கு ஐயா ஓ.பி.ராமசாமி ரெட்டியார் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் ஐயா அவர்கள் பெயரை சொல்லி அழைத்த உடனே நான் இதில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்தேன். காரணம் அத்தகைய ஒரு  நேர்மையை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தவர் ஓ.பி.ஆர். அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. இன்று ஓ. பி. ஆர். - ஐ போன்ற நேர்மையானவர்களை நாம் பார்ப்பது அபூர்வமாக உள்ளது. அவரது ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும். அது உங்களது கைகளில் தான் உள்ளது. இளைஞர்களாகிய உங்களால் தான் அது முடியும். அத்தகைய மிகச் சிறப்பான ஆட்சியை இன்றைய இளம் தலைமுறையினர் தான் தர முடியும்.  IAS படிப்பிற்க்கான கல்வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி எனவே  அதற்கு நம்பிக்கையோடு குரூப் 2 முதன்மைத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளுங்கள்...