பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்று வழங்க கோரி கோரிக்கை – சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அறிவிப்பு

சென்னை, மார்ச் 31, 2026: பரம்பரை சித்த வைத்தியர்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை உறுதி செய்ய, நீண்ட நாள் கோரிக்கையாக நிலவி வரும் ESMP பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சித்த வைத்திய சங்கம் மற்றும் தமிழக பரம்பரை சித்த வைத்திய சங்க கூட்டமைப்புகளின் நிறுவனர் & பொதுச்செயலாளர் பிரம்மஸ்ரீ மரு.G.கருணாமூர்த்தி தலைமையிலான இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்று வழங்க கோரி கோரிக்கை – சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அறிவிப்பு

அப்போது அவர் கூறியதாவது: பரம்பரை சித்த வைத்தியர்களின் 35 ஆண்டு கால கோரிக்கையான அவர்களின் பதிவு உரிமம் ரத்து செய்யப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழகத்தில் சித்த மருத்துவம் என்பது பரம்பரை மருத்துவம் ஆகும். கிராமபுறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 1990 வரை சுமார் 2,00,000 லட்சம் குடும்பத்தினர் பரம்பரை சித்த மருத்துவம் பார்த்து தமிழக மக்களையும் காத்து வந்தனர். அதன்பின்பு 1992-க்கு பின்பு பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு பதிவு உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இப்பொழுது 20,000 குடும்பம் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் அரசு பதிவு உரிமம் வழங்கிட 35 ஆண்டு காலமாக போராடி வருகிறோம்.

Youtube Video link 👇 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1992ஆம் ஆண்டு பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்றிதழ் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் சான்றிதழ் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அக்கால அரசியல் சூழ்நிலையால் அது நிறைவேறாமல் போனது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய சித்த வைத்திய சங்கம், தமிழக பரம்பரை சித்த வைத்திய சங்க கூட்டமைப்புகள், மூலிகை வளர்ப்பு விவசாயிகள், நாட்டு மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் சித்த மருத்துவ மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில், சுமார் 10 லட்சம் வாக்காளர்களின் ஆதரவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கூட்டணிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரம்பரை சித்த வைத்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ESMP சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்தவுடன் இந்த கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai