பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும்! – தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் உரிமை முழக்க தர்ணா போராட்டம்

சென்னை, 17 பிப்ரவரி 2026: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 17.02.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கம் அருகே “உரிமை முழக்க தர்ணா போராட்டம்” நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா. பாலசுப்ரமணியன் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும்! – தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் உரிமை முழக்க தர்ணா போராட்டம்

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) இதுவரை நடைமுறைக்கு வராத நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) சங்கம் ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதையும் உள்ளடக்கிய 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Press meet Youtube Video link 👇 

முக்கிய கோரிக்கைகள்:
  1. தமிழக அரசு அறிவித்துள்ள TAPS திட்டத்தை ரத்து செய்து OPS திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  2. பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி எண் 187 படி 3.50 லட்சம் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
  3. கருணை அடிப்படையிலான Group–C நியமனத்தில் உள்ள மறைமுகத் தடையை நீக்க வேண்டும்.
  4. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ரூ.7,000 போனஸ் வழங்க வேண்டும்.
  5. புற ஆதார முறையில் நியமனம் செய்யும் அரசாணை எண் 15-ஐ திரும்பப் பெற வேண்டும்.
  6. புதிய மாநகராட்சி/நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
  7. தேர்தல் வாக்குறுதி எண் 310 படி நிர்வாகத் தீர்ப்பாயம் மற்றும் கூட்டுக் குழு அமைக்க வேண்டும்.
  8. காப்பீட்டுத் திட்டத்தை தனிநபர் ஒப்புதல் இல்லாமல் புதுப்பிப்பதை நிறுத்த வேண்டும்.
  9. தேர்தல் வாக்குறுதி எண் 311 படி இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்.
  10. 181 பகுதிநேர சிறப்பாசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; 2004–2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும்.
  11. உயர்நிலை/மேனிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும்.
  12. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் (வாக்குறுதி எண் 313).
  13. TET தேர்ச்சி பெற்ற தொகுப்பூதிய ஆசிரியர்களை நிபந்தனை இன்றி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  14. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.
  15. ஆசிரியர் நியமனத்திற்கு ONE EXAM POLICY நடைமுறைப்படுத்த வேண்டும்.
  16. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் (வாக்குறுதி எண் 153 & 317).
  17. இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
  18. தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும்.
  19. கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு முழு அரசு ஊழியர் உரிமைகள் வழங்க வேண்டும்.
  20. வணிகவரி துறையின் நீண்டகால உச்சநீதிமன்ற வழக்கை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  21. பள்ளிக் கல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணைகளில் திருத்தம் செய்து, பெண் ஆசிரியர்களுக்கு அருகாமை/விருப்பப் பள்ளி மாறுதல் வழங்க வேண்டும்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai