2026 தேர்தலில் தமிழக நீதி சங்கம் யாரை ஆதரிக்கிறது? | மார்ச் 1 மாநில மாநாடு – காஞ்சிபுரம்

சென்னை: தமிழக நீதி சங்கம் உலகெங்கும் வாழும் முதலியார், பிள்ளைமார் மற்றும் வேளாளர் சமூக மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒற்றுமை இயக்கமாக திகழ்கிறது. சமூக நீதி, அரசியல் விழிப்புணர்வு மற்றும் தலைமுறை முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அமைப்பு பல்வேறு சமூக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

2026 தேர்தலில் தமிழ் நீதி சங்கம் யாரை ஆதரிக்கிறது? | மார்ச் 1 மாநில மாநாடு – காஞ்சிபுரம்

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக நீதி சங்கம் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாநில மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. சமூக உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை முன்னிலைப்படுத்தப்படும் முக்கிய அம்சங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press meet Youtube Video link 👇 

தமிழக நீதி சங்கம், நிறுவனத் தலைவர் –  Dr. N. கார்த்திகேயன், MBBS., MS., FMAS., FIAGES தலைமையில் நடைபெறும் இந்த மாநில மாநாடு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வரலாற்றுச் சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“இனமே எழு – ஒற்றுமை பெறு”
தமிழக நீதி சங்கம் – முதல் மாநில மாநாடு
தேதி: 01.03.2026; இடம்: வீனஸ் அரங்கம், பரந்தூர், காஞ்சிபுரம்; நேரம்: மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேளாளர், முதலியார், பிள்ளைமார் சமூக பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர். “ஒற்றுமை பெருக!!” என்ற கோஷத்துடன் சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான உரைகள், தீர்மானங்கள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

****

Popular posts from this blog

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

Zydus Pinkathon Returns to Chennai After 7 Years | A Grand Celebration of Women's Health, Fitness & Empowerment Awaits!

Star Health Marks 20 Years of Trust and Care; Settles 2.5 Lakh+ Claims Worth ₹1,606 Crore in Tamil Nadu