பப்புவா நியூ கினியா வர்த்தக தூதர் விஷ்ணு பிரபு குடும்பத்துடன் வாக்களிப்பு; கோவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கோவை, ஏப். 23: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்திலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பப்புவா நியூ கினியா வர்த்தக தூதர் விஷ்ணு பிரபு குடும்பத்துடன் வாக்களிப்பு; கோவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விஷ்ணு பிரபு, பப்புவா நியூ கினியாவின் வர்த்தக தூதர்

இந்நிலையில், கோவையில் வசித்து வரும் பப்புவா நியூ கினியாவின் வர்த்தக தூதரான விஷ்ணு பிரபு, தனது குடும்பத்துடன் கோவை குனியமுத்தூர் நிர்மல் மாதா கான்வென்ட் பள்ளி வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து தமது வாக்கை பதிவு செய்தார். 

Youtube Video link 👇 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு, வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிப்பை அனைவரும் நிறைவேற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்களின் உற்சாகம் கணிசமாகக் காணப்படுகிறது. இளம் வாக்காளர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த முன்வந்துள்ளனர். தேர்தல் அமைதியாகவும் சீராகவும் நடைபெறுவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

****

Popular posts from this blog

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

L&T Technology Services Global EI OpenHack 2026 Sparks the Next Wave of AI-Native Engineering Solutions

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking