மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 29வது புதிய ஷோரூமை சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் திறந்துள்ளது


  • இந்த புதிய ஷோரூமை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் திரு.ராமசந்திரன் திறந்து வைத்தார்.

சென்னை ஜூலை-12-2024: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் படுத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் சென்னையில் 7வது புதிய ஷோரூமை இன்று வேளச்சேரி 100 அடி சாலையில் திறந்துள்ளது.

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை திரு.R.ராமசந்திரன் (தமிழ்நாடு சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் அமைச்சர்). திரு.JMH.அசன் மெளலானா (சட்டமன்ற உறுப்பினர் வேளச்சேரி), ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரு.யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்). திரு.சபீர் அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்). திரு.அமீர் பாபு (மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), திரு.கார்ட்வின் ஜோசப் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சென்னை வேளச்சேரி கிளை தலைவர்) மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

-----------------------------------------------------

Youtube video link 👇

-----------------------------------------------------

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 350-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி. வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளை கொண்டுள்ளது.



மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்' பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட 'எரா' மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான 'பிரீசியா' நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான 'எத்தினிக்' நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான 'டிவைன்' குழந்தைகளுக்கான நகை தொகுப்பான 'ஸ்டார்லெட்'ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

****


Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩