ஞானி பிருந்தாவனர் சொற்பொழிவு | மகா சித்த புருஷர் போக மகரிஷி ஜென்ம நட்சத்திர திருவிழா


சென்னை, ஜூன் 6, 2024: சித்த புருஷர் போகர் அய்யா அவர்களின் ஜென்ம நட்சத்திர திருவிழா இன்று கோலாகலமாக தாம்பரம் ராஜகோபால திருமண மாளிகையில்  இன்று நடைபெற்றது. விழாவிற்கு பல சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்து பெருமை சேர்த்தனர். இங்கு வருகை தந்திருந்த அனைத்து மக்களுக்கும் சித்தர்களின் ஆசிர்வாதத்தால் தங்க பஸ்ப விபூதி அருளப்பட்டது. ஞான சத்சங்கமும் உணவு தானமும் வழங்கப்பட்டது. 
யோகிராம் சுரத்குமார் ஐயா அவர்களின் அருளாலும், மகாசொர்ண ஆகர்ஷன பைரவரின் அருளாலும் இந்த தங்க பஸ்ப விபூதியில் காரிய சித்தி பிரயோகம் செய்யப்பட்டது. 27 நாட்கள் தியானத்துடன் இந்த விபூதியை உட்கொள்ளும் பொழுது உடற்பிணி, மனப்பிணி நீங்கி, நாம் எண்ணிய நியாயமான காரியம் நிறைவேறுகிறது.  

___________________________________
Satsang Youtube video link 👇
___________________________________

ஞானி பிருந்தாவனர் மற்றும் ஞானிபிருந்தாவனர் ஞானபீடம்: 
18 சித்தர்களில்  ஒருவரான போக மகரிஷியின் சீடர் ஞானி பிருந்தாவனர் ஐயா அவர்கள். தன்னுடைய சிறு வயதிலிருந்தே பல உண்மை குருவிடம் குருவடி தொண்டு செய்து பல யோக சாதனைகளை புரிந்து, பல தெய்வீக உபாசனைகளை மேற்கொண்டு இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெற்று  ஞானமடைந்தார்.  தனது குருவின் வாக்குகிணங்க, யாம் கற்றுணர்ந்த இந்த சாகா கல்வியை உலக மக்கள் அனைவருக்கும் வெளிப்படுத்த ஞானி பிருந்தாவனர் ஞானபீடத்தை அமைத்து, மக்களுக்கு சாகா கல்வியினை கற்றுக்கொள்ளும் உபாயத்தினை வழங்குகிறார். மக்களுக்கு சாகாக் கல்வியினை கற்றுக் கொள்வதற்குண்டான ஆன்ம தகுதியை மேம்படுத்துவது இந்த பீடத்தின் நோக்கமாக உள்ளது.

ஞானி பிருந்தாவனர் ஐயா அவர்கள் youtube வலைதளத்தில் பகிர்ந்த சிதம்பர சக்கர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத பல கர்ம வியாதிகள் குணமடைகிறது. 

சித்தர்கள் அருளிய சிகிச்சைகள்
சித்தர்களின் மார்கத்தில் இந்த தேகம் தான் பிரதானம். இந்த தேகத்தினை காப்பதற்கும், வளர்ப்பதற்கும், பல உபாயங்களை சித்தர்கள் அவர்களது பாடல்களில் கூறியிருக்கின்றனர். 

சித்தர்களின் பரிபாஷையை முழுமையாக உணர்ந்ததாலும், சித்தர்களின் கட்டளையினாலும், மக்கள் நலம் பெறும் பொருட்டு பல சிகிச்சைகளை அளிக்கின்றார்.  அவை அற்புத சித்தர் சிகிச்சை, ரகசிய சித்தர் சிகிச்சை, சூட்சம சித்தர் சிகிச்சை, இசை மந்திர சிகிச்சை. பல லட்ச மக்கள் இந்த சிகிச்சையினால் குணமடைந்திருக்கிறார்கள். 

சித்தர்கள் மறைபொருளாக வைத்திருந்த பல அதி சூட்சம யுக்திகளை கொண்டும், மந்திர, தந்திர பிரயோகங்களை கொண்டும்  மக்களின் உடற்பிணி மனப்பிணிகளை சர்வ லோக சித்தர்களின் அருளாலும், சர்வலோக தெய்வங்களின் அருளாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாலும் சரி செய்கிறார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴