மாமனிதன் விருதுகள் 2022- தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் துவக்கம்


சென்னை: மாமனிதன் விருதுகள் 2022 பிரம்மாண்ட தொடக்க விழா தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் PRIME INDIAN மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கண்ணன் மற்றும் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் க.சேட்டு அவர்கள் முன்னிலையில் இன்று தொடங்கப்பட்டது.

Video Link👇👇
இதன் முதல் கட்டமாக வாக்கு பெட்டி வைக்கப்பட்ட வாகனம் கொடி அசைத்து இனிதே துவங்கப்பட்டது.  பொது மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த வாகனம் முக்கிய நகரங்களுக்கு செல்லும். மேலும் மக்கள் நேரடியாகவும், இணையதள மூலமாகவும் வாக்குகளை செலுத்தலாம்.
(L to R) தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார்;  பாலகிருஷ்ணன் PRIME INDIAN மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கண்ணன்

அடுத்த 20 நாட்களில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் சேகரிக்கப்பட்ட நிலையில் விருது வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டு மாமனிதன் விருதுகள் 2022 வழங்கப்படும்.
மாமனிதன் விருதுகள் 2022 அரசியல் திரைத்துறை, தொழில் துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவை ஆகிய துறைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாமனிதர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

****

Popular posts from this blog

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

Kauvery Hospital Alwarpet Performs World's First Catheter-Based Treatment for Failing Aortic & Pulmonary Valve