கோயம்பேடு வணிக வளாக சங்கங்களின் கூட்டமைப்பு மே 5 முதல்வர் மாநாட்டில் பங்கேற்பு


சென்னை, மே 2,  2022: கோயம்பேடு வணிக வளாகம் காய்,கனி, மலர், உணவு தானியம் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  இதில் கூட்டமைப்பின் தலைவர் G.D.ராஜசேகர், பொதுச்செயலாளர் S.சீனிவாசன், பொருளாளர் இந்திரகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youtube Video👇👇

அப்போது அவர்கள் பேசியதாவது: எங்கள் கோயம்பேடு வணிக வளாகம் காய்,கனி, மலர், உணவு தானியம் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  தீர்மானங்கள் வரும் மே5 வியாழக்கிழமை அன்று வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து வணிகர் தின ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் திருச்சியில் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோயம்பேடு அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

L&T Technology Services Global EI OpenHack 2026 Sparks the Next Wave of AI-Native Engineering Solutions