பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு! சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்!


சென்னை, டிசம்பர் 6, 2021:  1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், அயோத்தியில் முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டும் அல்ல, தேசத்தின் இறையாண்மையும், ஜனநாயகமும், வழிபாட்டு உரிமையும், மதசார்பின்மையும், சிறுபான்மையினரின் நலன்களும், பாதுகாப்பும் சேர்ந்தே அப்போது தகர்க்கப்பட்டது. 

Youtube video👇👇

எனினும் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 நவம்பர் 9 அன்று, நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கடந்த செப்.30 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இந்திய நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தன. இதனால் உலக நாடுகளுக்கு முன்னாலும், சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலும் இந்திய நீதித்துறை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில், டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இருந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

அதனடிப்படையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று (டிச.05) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஹம்மது ரஷித் மண்டல செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.அப்துல் ஹமீது. மாநில துணை தலைவர், முஹம்மது ஷேக் அன்சாரி - பாப்புலர் ஃபிரண்ட் மாநில தலைவர் எஸ்.எஸ்.பாலாஜி - திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர், வீரபாண்டியன்- துணை பொது செயலாளர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தி - ஒருங்கிணைப்பாளர்-மே 17 இயக்கம், செந்தில் ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழகம் இயக்கம் ஆகியோர்கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முஹம்மது,மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்மாயில், வட சென்னை கிழக்கு மாவட்ட பொது செயலாளர் புஸ்பராஜ் ,மத்திய சென்னை தெற்கு மாவட்ட பொது செயலாளர் சலீம் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai