திரிபுராவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் TNTJ சார்பில் ஆர்ப்பாட்டம்


சென்னை, நவம்பர் 01, 2021: திரிபுராவில் விஷ்வ இந்து பரிசத் திட்டமிட்டு கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக வட சென்னை மாவட்ட தலைவர் MA. சாகுல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. ஆர் அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

YouTube Video👇👇
அவர் கூறியதாவது பாஜக அரசு இந்தியாவில் பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மையினராக இருக்கக் கூடிய முஸ்லிம்கள் அதிகம் தாக்கப்படுவது என்றும், முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது என்றும், பிரதமர் மோடி சர்வாதிகார முறையில் தேசத்தை கொண்டு செல்கிறார் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு பேரணி என்ற பெயரில் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் திட்டமிட்டு சென்று, முஸ்லிம்களை தாக்கி படுகொலை செய்தும், முஸ்லிம்கள் மத வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாசல்களை தாக்கியும் முஸ்லீம்களின் கடைகளை அடித்து நொறுக்கியும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் இத்தகைய வன்முறை செயல்களால் நமது தேசத்தில் உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கொரானா காலக் கட்டத்தில் கூட ஆளும் பாஜக அரசினர் மக்களுக்கு அதிக அளவு உதவிகளை செய்தது இல்லை, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மளமளவென உயர்ந்து உள்ளது அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய அரசு. 

இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். திரிபுரா மாநிலத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அதே வேளையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை உடனடியாக கைது.செய்து சட்டத்தின் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் E. பாரூக், காஞ்சி சித்திக், காஞ்சி இப்ராஹிம், 1. அன்சாரி, யாசர் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் பயாஸ் வட சென்னை மாவட்ட செயலாளர் பெரோஸ் கான் தென் சென்னை மாவட்ட செயலாளர் சாதிக் வட சென்னை மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது தென் சென்னை மாவட்ட பொருளாளர் தமீம் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care