Popular Front of India (PFI) Opens Covid Care Centre in Chennai


சென்னை 27 மே, 2021: கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு கொரோனா நிவாரண பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகின்றது. 

Video👇👇

கொரோனாவால் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவது ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குவது போன்ற பல்வேறு கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னையில் இலவச கோவிட் மீட்பு மையம் துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக் ராஜா, பரக்கத் மேன்சன் உரிமையாளர் பரக்கத் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி அவர்கள் இலவச கோவிட் மீட்பு மையத்தை திறந்துவைத்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச, உமர் பாரூக், எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணியின் மாநிலத் தலைவர் M. முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி அவர்கள் தனது உரையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் நமது நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கான துயர் துடைப்பு பணிகளையும், உதவி மையங்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் அவசியத்தை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. நோயாளிகளுக்கு படுக்கையறை வசதிகளும், தேவையுடையவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக கொரோனா இரண்டாவது அலையில் இறந்தவர்களை அவரவர் மத வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை மக்களின் அவசிய சூழல் கருதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் மருத்துவ வசதி மற்றும் படுக்கைகள் கொண்ட இலவச கோவிட் மீட்பு மையம் (Free covid relief centre) இன்று துவங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் கோவிட் தொற்றுக்கு எதிரான எங்களது மீட்புப் பணிகளை விரிவுபடுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இப்படிக்கு

A.முஹமதுரபீக்ராஜா, மாநில பொறுப்பாளர், பாப்புலர் ஃப்ரண்ட் கோவிட்மீட்பு மையம், தமிழ்நாடு

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai