திமுக ₹500 கோடி பணம் லட்சிய ஜனநாயக கட்சியிடமிருந்து வாங்கிய காரணம்? ஜோஸ் சார்லஸ் மார்டின் கடும் கேள்வி!

சென்னை, ஏப்ரல் 13, 2026:  திமுக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடமிருந்து ₹500 கோடி நிதி பெற்றதாகவும், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

திமுக ₹500 கோடி பணம் லட்சிய ஜனநாயக கட்சியிடமிருந்து வாங்கிய காரணம்? ஜோஸ் சார்லஸ் மார்டின் கடும் கேள்வி!

மேலும் லால்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “என் தாயைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இது அரசியலில் ஏற்க முடியாததும், மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்,” என்றார்.

Youtube Shorts Link:

மேலும், “ஒரு அரசியல் தலைவராக இருக்கிறவர் இவ்வாறு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது தவறு. இதுபோன்ற பேச்சுகள் சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், விரைவில் வழக்கு தொடர்வதாகவும் ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் தெரிவித்தார். “என் குடும்பத்தின் கௌரவத்தை காக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்,” என்றும் அவர் வலியுறுத்தினார். 

அத்துடன், உதயநிதியை கடுமையாக விமர்சித்த அவர், “அரசியலுக்கு தகுதியற்ற ஒருவர் என்றால் அது உதயநிதிதான்,” என கூறினார்.

தன் நிறுவனத்தின் பொருளாதார நிலையை விளக்கிக்கொண்ட அவர், “என்னுடைய நிறுவனம் ₹24,000 கோடி டர்ன்ஓவர் செய்கிறது; ₹7,000 கோடி வரி கட்டி வருகிறோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக அல்லது அமைச்சர் உதயநிதி தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai