உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை (Karate) பயிற்சி

சென்னை, மே 2, 2025: உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கராத்தே மாஸ்டர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை (Karate) பயிற்சி அளிக்க இருப்பதாக சங்கத்தின் தலைவர் S. பாலமுருகன் இன்று பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கூறினார். 

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை (Karate) பயிற்சி

மேலும் அவர் கூறுகையில், 
நாங்கள் சென்னையை தலைமையாக கொண்ட சர்வதேச கராத்தே பயிற்றுனர்கள் சங்கம், உலகளவில் 55 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம். நமது முன்னோர்கள் இந்த அழகான பூமியில் நாம் வாழவும் வளரவும் ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கி வைத்து இருந்தார்கள். அதை நாம் கடந்த சில தசாப்தங்களாக இழந்துவிட்டோம்.

Press meet Youtube Video link 👇 

தொழில்நுட்பத்தில் மிகவும் நவீன மயமான இந்த உலகில் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு தந்துசென்ற பாதுகாப்பான சமுதாயத்தை, நமது வருங்கால சந்ததியினருக்குக் கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமை.

எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், அரசியலமைப்புச் சட்டம், தேசிய அமைச்சரவை, மாநில அமைச்சரவை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு இருந்தபோதிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற மக்களுக்கு எதிரான குற்றங்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மக்களின் சுயபாதுகாப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நம் ஒவ்வொருவரின் கடமையும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு முற்றிலும் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கராத்தே மாஸ்டர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார்கள்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Skill India Development பதிவுசெய்யப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரே கராத்தே சங்கம் எங்கள் உலக கராத்தே மாஸ்டர்கள் ஆகும். இந்த இலவச தற்காப்புக் கலையை பொதுமக்களுக்குக் கற்பிக்கும் எங்கள் அனைத்து கராத்தே மாஸ்டர்களுக்கு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்யக்கூடிய, Skill India Development நிறுவனத்தின் சான்றிதழுடன் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற ஏற்பாடு செய்துள்ளோம்.

முதல் கட்டமாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு இந்த இலவச தற்காப்பு கலை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்த தன்னலம்மற்ற செயலை செய்ய நாங்கள் யாரிடமும் பணம், பதவிகள் அல்லது வேலைகளைக் கேட்க மாட்டோம். உங்களுடைய பொன்னான ஆதரவு மட்டும் இருந்தல் போதும். அற்புதமான கராத்தேவின் தற்காப்புக்கலையை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சென்று, நமது குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த தன்னலம்மற்ற செயலின் நன்மைகளை பொது மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க, ஜனநாயகத்தின் முதுகெலும்பான ஊடகத்தின் ஆதரவை வேண்டி நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

எங்களுடன் கைகோர்த்து இந்த தன்னலமற்ற செயலைச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் http://bit.ly/safersociety என்ற வலைத்தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது +91 97909 94917 என்ற எண்ணில் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai