டைடல் பூங்கா பட்டாபிராம் அருகில் ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

சென்னை, நவம்பர் 25, 2025: சென்னை ஆவடி அடுத்த ஆயில் சேரியில் மெட்ராஸ் சிட்டி ப்ரொமோட்டர்ஸ் டாட் காம்-வின் புதிய மனை பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதி அரசர் டி.என்.வள்ளிநாயகம்; நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மனை பிரிவினை திறந்து வைத்தனர்.

டைடல் பூங்கா பட்டாபிராம் அருகில் ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

மேலும் இந்த புதிய மனை பிரிவின் சிறப்பு அம்சங்கள் பற்றி நீதி அரசர் கூறுகையில் இவ்விடத்தில் பனை மரங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது, பனை மரத்தின் நன்மைகளை இவ்விடத்தில் மனை வாங்கும் மக்களுக்கு பனை மரத்தின் நன்மைகள் புரிய வரும். இவ்விடம் பசுமை நிறைந்த இடமாக இருப்பது மனதிற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று கூறினார்.

Press meet Youtube Video 👇 

அதனை தொடர்ந்து நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் கூறுகையில் இது எங்களுடைய 150வது துவக்க விழா நிகழ்ச்சியாகும். இது சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மனைப்பிரிவு அமையப்பட்டுள்ளது. 120 வீட்டு மனைகள் 700 சதுர அடிமுதல் 2000 சதுர அடி வரை விற்பனை செய்யப்படும். மனையின் விலை ரூ.28 லட்சம் முதல் தனி வீட்டில் விலைரூ.48 லட்சம் என்றார் ரூபாய் ஒரு சதுர அடிரூ‌ 3750 மேலும் இங்கு வங்கி மூலம் 80% கடன் பெற நாங்கள் வழிவகை செய்து தருவோம். வங்கி மூலம் கடன் பெற முடியாதவர்களுக்கு 50% முதலில் கட்டி பதிவு செய்து கொண்டு 7 ஆண்டுக்குள் மீதியை கட்ட அவர்களுக்கு அனுமதி தர உள்ளோம். 

அதேபோல் இவ்விடத்தில் இடம் வாங்கி வீடு கட்டும் வரை நாங்களே உடனிருந்து மற்ற இடத்தை விட சுமார் ரூ.13லட்சம் குறைந்த அளவில் வீடுகளை கட்டித் தருவோம். எங்கள் நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக 150 இடங்களில் இது போன்ற இடங்களை விற்பனை செய்துள்ளோம் இதுவரை எங்களிடம் 4000 வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் என்று கூறினார். மனையின் சிறப்பு அம்சம் அருகில் பட்டாபிராம் டைட்டில் பார்க் உள்ளதால் வேலை வாய்ப்பு குறையில்லாமல் இருக்கும். மனையிலிருந்து ஆவடி பூந்தமல்லி பட்டாபிராம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வழியில் உள்ளன. 

மனையிலிருந்து ஆவடி இந்துக்கல்லூரி ரயில் நிலையமும் மேலும் பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. மேலும்மக்கள் வாழ இவ்விடம் சிறந்து விளங்கும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஏ. ஹென்றி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩

33𝘳𝘥 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘋𝘳.𝘔.𝘎.𝘙.𝘌𝘥𝘶𝘤𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘙𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦; 𝘏𝘰𝘯𝘰𝘳𝘢𝘳𝘺 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘢𝘵𝘦𝘴 𝘢𝘸𝘢𝘳𝘥𝘦𝘥 𝘵𝘰 𝘍𝘪𝘭𝘮 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴 𝘈𝘤𝘵𝘪𝘰𝘯 𝘒𝘪𝘯𝘨 𝘈𝘳𝘫𝘶𝘯 𝘢𝘯𝘥 𝘗.𝘝𝘢𝘴𝘶