டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை நடத்தும் உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி


சென்னை, செப்டம்பர் 02, 2024: உலக பாலியல் நல தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ம்தேதி வரை பாலியல் நலம் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சி, வடபழனியில் டாக்டர் காமராஜ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. டாக்டர் டி. காமராஜ் மற்றும் டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை  சந்தித்து கண்காட்சி குறித்து விளக்கம் அளித்தனர். அவருடன் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கலந்து கொண்டு பாலியல் சர்வே முடிவுகளை வெளியிட்டார்.

அப்போது டாக்டர் டி. காமராஜ் கூறியதாவது: தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் 04.09.2024 அன்று காலை 10:30 மணி அளவில் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பாலியல் நலம், குழந்தையின்மை, பிரச்சனைகள், ஆண்மை குறைவு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியோடு ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெறுகிறது.

Press meet Youtube Video link 👇 
கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் மருத்துவர்களை சந்தித்து பேசலாம். இலவச ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பன்னாட்டு அளவிலான மருத்துவ கருத்தரங்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். மருத்துவ அறிவியலை, நவீன சிகிச்சை முறைகளை, கண்டுபிடிப்புகளை, சரியான வாழ்வியல் முறைகளை பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது எங்களது நோக்கம்.

மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை,இருப்பிடம் என்று இந்த மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். நான்காவதாக பாலியல் நலமும் உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கியமும் மனிதனின் அடிப்படை தேவையாகும்.

உலக அளவில் சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா வந்துவிட்டது. சர்க்கரை நோயாளிகளில் 50 % பேர் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதில்லை. இதனால் பாதிக்கப்படுபவர்களில் 60% பேருக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான தவறான செல்போன் பயன்பாடு, லேப்டாப் பயன்பாடு போன்றவற்றால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

நவீன மருத்துவம் பெரிய அளவுக்கு புதிய புதிய மருந்துகளை, சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்து வந்தாலும் அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட ஒரு மாற்று வழி கிடைக்காதா என்று ஏங்கிய மக்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருப்பது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

நவீன மருத்துவ உலகின் மாபெரும் ஹீரோவாக வந்து மக்களின் தீராத நோய் பாதிப்புகளில் இருந்து காப்பாற்றி வருகிறது இந்த ஸ்டெம் செல் சிகிச்சை. உலகளவில் முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும் அதிசயமான கண்டுபிடிப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நமது மரபணுவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்.

மாதவிடாய் நின்று போன பின்பும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியை உருவாக்கி குழந்தை பேற்றை அடைய முடியும்.

செயற்கை கருத்தரிப்பு முறையில் தோல்வி அடைந்த பெண்கள், இயற்கையான முறையில் தாய்மைப் பேறு அடைய ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

ஸ்டெம் செல் சிகிச்சைக்கு சிறந்த உதாரணமாக... விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விளையாட்டின் போது பலமுறை காயம் பட்டு, அவதிப்பட்ட போது அதிவிரைவாக ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்துக் கொண்டு மறுபடியும் களத்தில் இறங்கி விளையாண்டு உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த, 'சூப்பர் மேன்' ஹாலிவுட் படங்களில் நடித்த,கிறிஸ்டோபர் ரீவ், குதிரை ஏற்ற பயிற்சியின்போது கீழே விழுந்து கழுத்துக்கு கீழ் செயல்படாமல் படுத்த படுக்கையாக சிரமப்பட்டார். அவர் ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்த பிறகு படுக்கையிலிருந்து எழுந்து மறுபடியும் நடிப்புலகத்துக்கு வந்தார். அதனால் அவர் உலகம் முழுக்க பயணம் செய்து ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து பேசினார்.

அல்சைமர் முதல் ஆட்டிசம் வரையிலான அனைத்து நோய்களுக்கும் சிறந்த தீர்வு உண்டு.

இவை தவிர மூட்டுத் தேய்மானம், தண்டுவட காயங்கள், விளையாட்டு காயங்கள், நாள்பட்ட ஆறாத புண், முடி உதிர்தல், மன வளர்ச்சி குறைபாடு, மதுவுக்கு அடிமை, மார்பக அளவு அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு குறைபாடு நோய்கள், குடல் அழற்சி பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய் உட்பட எல்லா நோய்களுக்கும் எளிய தீர்வை வழங்குகிறது ஸ்டெம் செல் சிகிச்சை.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴