ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி


சென்னை, பிப்ரவரி 1, 2023: ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

Video👇

ஓ பி ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கே ஆர் டி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதானம் வழங்க நிகழ்வில் கண்ணில் புரை, கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல் சம்பந்தமான வியாதிகளுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிகளுக்கான பரிசோதனைகலும் நடைபெற்றது.

இந்த சிறப்பு கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சென்றனர்... மேலும் கண்களில் லென்ஸ் பொருத்தப்படும் பயனாளர்களுக்கு போக்குவரத்து தங்குமிடம், உணவு, மருந்து உள்ளிட்டவைகள் ஓ பி ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக இலவசமாக வழங்கப்படுவதாக அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள்தெரிவித்தனர்.

இதனையடுத்து அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai