அடுத்த குடியரசு தலைவர் யார்? தேர்வு முடிவாகிவிட்டதா?


விரைவில் நடைபெறப்போகும் குடியரசு தலைவர் தேர்தல் வரும் நிலையில் பலரது பெயர்களும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இப்போது இது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. உலக நாடுகள் இந்தியாவில் மதசார்பின்மை இல்லை என குற்ற படுத்தும் நிலையில் இப்போது இதை பொய்மை படுத்தும் விதமாகவும் இந்தியாவில் ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


ஏற்கனவே பத்து இந்து மதத்தை சேர்ந்த ஜனாதிபதிகளும், மூன்று முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களும், ஒரு சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களும் இருந்து விட்டார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் ஒரு கிறிஸ்தவர் கூட ஜனாதிபதியாக சேர்ந்தவர் இல்லை என்பது பெரும்  குறையாக இருந்தது. 

இப்போது இதை நிறைவு செய்யும் பொருட்டாக எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவராகவும், உலகை பலமுறை சுற்றிவந்து மிகுந்த அனுபவமுடையவரும், இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவரும் அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மைனாரிட்டியை சேர்ந்தவரும், கட்சி சார்பு அற்றவருமான ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் இதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. ஒரு கிறிஸ்தவ ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதன் மூலம் மதச்சார்பின்மையை நிரூபிப்பதோடுமாத்திரம் அல்ல, உலக நாடுகளின் ஆதரவை பெறுவதும், அதன் மூலம் இந்தியாவை உலக நாடுகளுக்கு இணையான தரத்தை உயர்த்தவும் ஐநாசபையில் வீட்டோ பவர் பெறவும், மூன்றாம் உலக மகா யுத்தத்தை தடுத்து நிறுத்தவும் ஒரு பெரும் வழி திறக்கும் என நம்ப படுவதால் இந்த முடிவை இறுதியாக எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 

கேரளாவில் கவர்னராக இருந்து வருகிற His Excellency Mr. Arif Mohammed khan அவர்களை உதவி ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உலக நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ மத தலைவர்களில் ஒருவரும் நாற்பது முறைக்கு மேலாக உலகத்தை சுற்றி வந்து அனுபவம் வாய்ந்தவரும் ஐநாவின் அமைதி தூதருமான Rev.Dr.Jayasingh அவர்கள் அனைவராலும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக பதிவு செய்து பலரின் வேண்டுகோளுக்கிணங்க வேட்பு மனுவை திரும்ப பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴