தேச நலன் காக்க சென்னை பிருங்கிமலையில் சிறப்பு திருவிளக்கு பூஜை வீதி உலா


சென்னை பிருங்கிமலை சுற்றிலும் அமைந்துள்ள கோவில்களில் பிருங்கிமலை பிருங்கி மகரிஷி ஆலய திருப்பணி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும்  பௌர்ணமி அன்று  சென்னையில் ஓர் கிரிவலம் பிருங்கி மகரிஷி உத்தரவால் தொடர்ந்து நடத்த கட்டளைபெற்று பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள் தலைமையில் அனைத்து சிவனடியார்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

பிருங்கிமலை ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள்
கடந்த மாதம் 15.05.2022 அன்று சென்னை பிருங்கிமலை அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் முற்றோதல், அன்னதானம் மற்றும் நடராஜர் உற்ச்சவர் வீதி உலா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாதம் அதேபோன்று சென்னை பிருங்கிமலையில் பிருங்கிமலை பிருங்கி மகரிஷி ஆலய திருப்பணி அறக்கட்டளை சார்பில் பிருங்கி மகரிஷி உத்தரவுப்படி பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள் தலைமையில் வருகின்ற பௌர்ணமி 14.06.22 அன்று மதியம் 2:30 மணியளவில் சென்னை பிருங்கிமலை மாங்காளி அம்மன் கோவிலில் தேச நலன் காக்க சிறப்பு முற்றோதல், 1000 பேருக்கு திருவாசகம் ருத்திராட்சை மற்றும் அன்னதானம் வழங்குதலும் இறுதியில் திரு விளக்கு பூஜை வீதி உலா செல்லும் விழா சிறப்பு யாகத்துடன் கைலாய வாத்தியங்கள் முழுங்க நடைபெற இருப்பதால் கட்சி. அமைப்புகள் பாகுபாடின்றி  அணைத்து இந்துக்களும் சிவசக்தி பக்தகோடிகளும் சிவனடியார் பெருமக்களும் திராளாய் கலந்து கொண்டு இறையாசி பெற  பிருங்கி மகரிஷி சார்பில் அழைக்கிறோம்

இந்துக்களே ஒற்றுமையை உணருங்கள். ஒற்றுமையால் உயருங்கள். மோட்சத்திற்கு ஒரே வழி சிவ வழிபாடு மட்டுமே. திருவிளக்கு வீதி உலா வருவோம். மன இருளை அகற்றுவோம். தேசத்தில் வெளிச்சம் பெற செய்வோம். தீவினைகளை அகற்றுவோம்.

இந்த திருவிழா நம் அனைவரின் மீது விழந்த கடைமையாகும் ஆகையால் நாம் ஒவ்வொருவரும் நம் இறைவனுக்கு கடமையாற்றி இறைப்பணி செய்வோம் வாருங்கள்.

  • திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் அடியார்கள்(பெண்கள் மட்டும்).
  • மூன்று நாட்கள் விரதம் இருத்தல் வேண்டும்.
  • வரும்போது காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் தாம்பூலம் கொண்டு வரவும்.

100 நபர்கள் மட்டுமே ஆகையால் இன்றே உங்கள் பெயர் தொலைபேசி இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இறைப்பணியில்,

பிருங்கிமலை ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள், தலைவர், பிருங்கிமலை பிருங்கி மகரிஷி ஆலய திருப்பணி அறக்கட்டள மற்றும் நிர்வாகிகள்

(இது ஒரு இந்து தமிழர் பேரவையின் அங்கமாகும்)

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai