விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவசேனா தமிழ்நாடு மாநில தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் அவசர பத்திரிகையாளர்கள் சந்திப்பு


சென்னை, ஆகஸ்ட் 30, 2021: இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பில் மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அவருடன் முதன்மை செயலாளர் பாலாஜி ராமன், வடசென்னை மாவட்ட செயல் தலைவர் ரூபன் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Video👇👇

சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவசேனா கட்சி சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சியின்  மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் திமுக ஆட்சியில் முதல் 100 நாள்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருப்பதை சிவசேனா கட்சி பாராட்டுகிறது என்று கூறினார்.

இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்படுகிறது கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோவில் சொத்துக்களில் வியாபாரங்களை முறையை படுத்துவதிலும் கோவில் பணிக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்களை நியமன படுத்துவதிலும் அறநிலைய ஆட்சித்துறை பாராட்டத்தக்க வகையில்  பணி செய்து வருகிறது என்று பாராட்டினார்.

கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து சிவசேனா கட்சி சார்பில் தமிழகத்தில் 10,000 விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி நடைபெறும்.

பெண்களுக்கு எங்கெல்லாம் பாலியல் தொல்லை நடக்கிறதோ அங்கெல்லாம் சிவசேனா கேள்வி எழுப்பும் என்று கூறினார்.

பாஜக தேடித்தேடி சமூக விரோதிகளை தலைவராக ஆக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.

மக்களுக்கு சேவை வழங்குவதை பாஜக ஒரு நாளும் செய்வதில்லை.

தமிழகத்தில் ஹிந்து மகா சேவையாக சிவசேனை கட்சியை நாங்கள் செய்வோம் என்று கூறினார.

பாஜக பெண்களை தாயாக மதிக்கிறோம் என்று கூறி வாக்குக் கேட்டார்கள் ஆனால் இப்பொழுது அவர்களை பாலியல் தொல்லை செய்பவர்கள் ஆக இருக்கிறார்கள் அதனால் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு செய்ய வேண்டும்.
  
அண்ணாமலை அவர்கள் பெண்கள் மதிக்கத்தக்க கட்சியாக பாஜக இருக்க வேண்டும் என்றால் அவர்தான் இந்தப் பாலியல் வழக்கில் முன் எடுக்க வேண்டும்.

கோயிலில் பூஜை செய்வதற்கு அனைத்து சாதிகளில் இருக்கும் மக்கள் பூஜை செய்ய வேண்டும்.

அனைத்து ஜாதிகளிலும் மாபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள் அதனால் இந்த ஜாதியைம் ஒதுக்கக் கூடாது .நாம் அனைவரும் ஹிந்துக்கள் அதனால் நமக்குள் சாதி பார்க்கக் கூடாது என்று கூறினார்.

அரசு தடைகளை விதித்து இந்து வழிபாட்டு உரிமைகளை பறிப்பது ஏற்கமாட்டோம் .விநாயகர் சதுர்த்தி விழாவை சிவசேனா சார்பில் கட்டுப்பாட்டுடன் நடத்துவோம் என்று கூறினார்.

பேட்டி: தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩