சென்னை, ஜூன் 1, 2021: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில், தனி மனித இடைவெளி, கட்டாய முகக்கவசம் என பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மிக எளிய முறையில் இன்று 01-06-2021 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புப் பொருட்களை வழங்கினார். நன்கொடையாளர்கள் திரு.த.மணிவண்ணன் மற்றும் யூத்திங்க் திரு.அப்துல்கனிஆகியோர் உடன் பங்கேற்கின்றனர்.
Video👇👇
லோகா பவுண்டேஷன் சார்பில் யூத்திங்க் அமைப்பு 1000 எண்ணிக்கையில் 1 நீராவி பிடிக்க உதவும் கருவி, முகக்கவசம், மல்ட்டி விட்டமின் மாத்திரைகளின் தொகுப்பு, கபசுர குடிநீர், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட்டது.
பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைச்செயலாளர் பாரதிதமிழன் நன்கொடையாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி பாராட்டினார்.
அன்பு காட்டுவோம் அரவணைப்போம்.. ஒற்றுமையாய் இந்த கொரோனா நெருக்கடியைக் கடப்போம்!
****