கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் நலன் கருதி முனைவர் ஆ.சா.செல்வராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சென்னை, 20 ஐனவரி, 2021: இலட்சிய சிறுபான்மை மக்கள் நல சங்கம் மற்றும் மண்ணின் மைந்தர்கள் கழகம் தலைவர் முனைவர் ஆ.சா.செல்வராஜ் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழக அரசாங்கத்திடம் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் நலன்  கருதி பல கோரிக்கைகளை வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல கிறிங்தவ கூட்டமைப்புகள் கலந்து கொண்டனர்.


நமது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்களுக்காக அளிக்கப்படும் பல நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்கவும், கிறித்தவ சிறுபான்மை போதகர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கவும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இலவா மின்சாரம் அளிக்கவும் தேவாலயங்கள் இடிக்கப் படுவதை தவிர்க்கவும், தமிழகத்தில் கிராமம், நகரம், மாநகரங்களில் தேவாலயங்கள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் கிறிங்தவ சிறுபான்மை மக்கள் தங்களது உரிமையை பெற்றுக்கொள்வார்கள். 

கோரிக்கைகள்:

1) கிறிஸ்தவர்களை அனைத்து மதத்தினரும் பாரபட்சம் காட்டாமல் இவர்களும் இம் மண்ணின் மைந்தர்கள் என்று அன்பாக நேசிக்க வேண்டும்.

2) தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஊழிய காரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

3) கல்வி வேலை மற்றும் அனைத்து துறைகளிலும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

4) அனைத்து தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும்.

5) பட்டா இல்லாத தேவாலயங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

6) கிறிஸ்தவர்களுக்கென்று தனி இடுகாடு வழங்கிட வேண்டும்.

7) போதகரகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.

8) கிறிஸ்தவ மக்களுக்கும் அரசியலில் பங்கு வேண்டும்.

9) நடைபெற இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் 99 தொகுதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்களின் உரிமைக்காக தனித்து நிற்போம்.

10) அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றாக இனைவோம் தேசத்தை வென்றிடுவோம்.


முனைவர் ஆ.சா.செல்வராஜ்

தலைவர்

லட்சிய சிறுபான்மை மக்கள் நல சங்கம்

மண்ணின் மைந்தர்கள் கழகம்

கைபேசி: 99520 34576, 97860 49476

மின் அஞ்சல் :Ismnsselvaraj@gmail.com

எண். 1/24 , மலையப்பா முதலித் தெரு, கேளம்பாக்கம், சென்னை - 603 103

அரசு பதிவு எண் : 104/2010

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩