மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் (𝘔𝘢𝘥𝘳𝘢𝘴 𝘊𝘪𝘵𝘺 𝘗𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘪𝘦𝘴. 𝘊𝘰𝘮) நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது

சென்னை: மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை  முன்னிட்டு முன்னேறு தமிழா பாடல் வெளியீட்டு விழா, சாருகேசி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டில் முப்பெரும் விழா நடைபெற்றது

மேலும் இந்தியன் ஃபேமிலி கிளப் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் உடன் இணைந்து 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா சென்னை மதுரவாயிலில்  உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

Programme Youtube Video link 👇 

மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில், வி ஐ டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான நடிகர் பார்த்திபன் , திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பெயரா அமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

முன்னதாக மெட்ராஸ் சினி ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஒய்  ஜி மகேந்திரன் நடிக்கும் சாருகேசி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா , தயாரிப்பாளர் அருண் உள்ளிட்ட சாருகேசி திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாருகேசி திரைப்படம் குறித்தான சுவாரஸ்யமான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் எழுதிய முன்னேறு தமிழா எனும் பாடல் வெளியிடப்பட்டது.

இதில் திரைப்பட கலைஞர்கள், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

****

Popular posts from this blog

District-Level Viksit Bharat Youth Parliament Competition 2026 Fosters Democratic Spirit at Mar Gregories College of Arts & Science, Mogappair West

'Rag Rekha’ Art Exhibition Inaugurated in Chennai, Celebrating the Confluence of Music & Visual Art

Golden Memories Rekindled as St. Bede’s 1976 Batch Reunites After 50 Years

UATT 2.0 அரசாணைகள் ரத்து செய்யக் கோரி தோட்டக்கலை அலுவலர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

சபரிமலையின் புனித பாரம்பரியத்தை காக்க ஒன்றுபட்ட போராட்டம்; அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா மிஷன் அறிவிப்பு