இரண்டு வருட பட்டப்படிப்பு படித்த ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
சென்னை, செப்டம்பர் 30, 2021: அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வக நுட்புனர் நிலை2 பணியிடங்களை அதிக அளவில் உருவாக்கி சமச்சீர் கல்விக்குமுன் படித்தவர்களை பாதிக்காத வகையில் நிரப்பிட தமிழக அரசிடம் மனு கொடுத்தல் சம்பந்தமாக இன்று இரண்டு வருட பட்டய ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் (Two Years Diploma Lab Technicians Association) சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. YouTube Video👇👇 இந்த சந்திப்பில் மாநில தலைவர் R.ஜெயபாரதி, மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி மற்றும் மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ் கலந்து கொண்டனர். (L to R) மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ்; மாநில தலைவர் R.ஜெயபாரதி; மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி அப்போது அவர்கள் பேசியதாவது: 1)நாங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்புனர் (DMLT) இரண்டு வருட பட்டயப்படிப்பு படித்துவிட்டு 15 வருடங்களுக்கு மேலாக அரசு பணியில் முன்னுரிமை இல்லாமலும் வேலை வாய்ப்பு இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம். 2) தமிழகம் முழுவதும் சுமார் 20000 பேர் ஆய்வக நுட்புனர் பட்டயப்படிப்பு (DMLT) முடித்துவி...