உத்திர பிரதேசத்தில் மௌலானா கலீம் சித்தீகை உ.பி. யோகி அரசு கைது செய்தததை கண்டித்து இமாம்ஸ் கவுன்சில் ஆர்ப்பாட்டம்
சென்னை, செப்டம்பர் 30, 2021: புகழ் பெற்ற மௌலானா கலீம் சித்தீக்கி அவர்கள் கைது அரசியல் சாசன உரிமையைப் பறித்த யோகி அரசை கண்டித்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி தலைமையில் இன்று காலை 11 மணியளவில்அண்ணா சாலையில் மக்கா மஸ்ஜித் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Youtube Video👇👇
ஆர்ப்பாட்டத்திற்கு இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் கே.அர்ஷத் அஹ்மது அல்தாஃபி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி, எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நாகூர் மீரான், மன்னடி செம்புதாஸ் பள்ளி இமாம் ராஜிக் பாகவி ஆகியோர் உ.பி அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:
ஃபாசிச பா.ஜ.க அரசு சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் சிந்தனையாளர்கள் என குறிவைத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் உத்தரப் பிரதேச மாநில அரசு மிகவும் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது. அதன் ஒரு பாகமாக மௌலானா கலீம் சித்தீக்கி அவர்களின் கைது உ.பி மாநிலத்தின் ATS எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் மூலம் நடைபெற்றுள்ளது.
இப்படிக்கு...
முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி,
மாநில செயலாளர்,
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
****