இரண்டு வருட பட்டப்படிப்பு படித்த ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
சென்னை, செப்டம்பர் 30, 2021: அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வக நுட்புனர் நிலை2 பணியிடங்களை அதிக அளவில் உருவாக்கி சமச்சீர் கல்விக்குமுன் படித்தவர்களை பாதிக்காத வகையில் நிரப்பிட தமிழக அரசிடம் மனு கொடுத்தல் சம்பந்தமாக இன்று இரண்டு வருட பட்டய ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் (Two Years Diploma Lab Technicians Association) சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
YouTube Video👇👇
இந்த சந்திப்பில் மாநில தலைவர் R.ஜெயபாரதி, மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி மற்றும் மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ் கலந்து கொண்டனர்.
(L to R) மாநில செயலாளர் R.ஜஸ்டின் ராஜ்; மாநில தலைவர் R.ஜெயபாரதி; மாநில துணைத்தலைவர் L.தாஷாயணி |
அப்போது அவர்கள் பேசியதாவது:
1)நாங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்புனர் (DMLT) இரண்டு வருட பட்டயப்படிப்பு படித்துவிட்டு 15 வருடங்களுக்கு மேலாக அரசு பணியில் முன்னுரிமை இல்லாமலும் வேலை வாய்ப்பு இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம்.
2)தமிழகம் முழுவதும் சுமார் 20000 பேர் ஆய்வக நுட்புனர் பட்டயப்படிப்பு (DMLT) முடித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்.
3)மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 2016ஆம் ஆண்டு அறிவிப்பு எண் 8/2016 வெளியிடப்பட்டு அதன்படி 524 ஆய்வக நுட்புனர் நிலை2 பணியிடங்கள் வெயிட்டேஜ் மூலம் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டது.
4)மருத்துவ பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு எண் 8/2016 ன் படி 9382 பேர் பதிவு செய்தோம். அதில் 1903 பதிவுகள் நிராகரிக்கப்பட்டு 7479 பதிவுகள் அங்கீகரிக்கப்பட்டு 524 பணியிடங்கள் வழங்கப்பட்டது. பதிவு செய்ததில் மீதம் 6955 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.
5)அதன்பிறகு பெரும்பாலான ஆய்வக நுட்புனர் நிலை 2 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படை மற்றும் பதவி உயர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டது.
6)ஆகையால் இனி நிரப்பப்படும் ஆய்வக நுட்புனர் நிலை 2 பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு எண் 8/2016 ல் மீதமுள்ள 6955 பேருக்கு முன்னுரிமை தந்து கடைசி பணியிடம் வரை 8/2016 அறிவிப்பில் மீதமுள்ள நபர்களுக்கு வழங்கவிட்டு புது அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
7)புது அறிவிப்பு வெளியிட்டால் 8/2016 அறிவிப்பில் பாதிக்கப்பட்ட 6955 பேருக்கும் என்றைக்கும் அரசு பணி கிடைக்காத சூழல் உள்ளது. காரணம் சமச்சீர் கல்விக்கு முன் படித்தவர்கள் மதிப்பெண்ணில் சமச்சீர் கல்விக்கு பின் படித்தவர்களை விட முன்னே செல்ல வாய்ப்பில்லை.
8)தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஆய்வக நுட்புனர் நிலை 2 பணியிடங்களை கண்டறிந்து நிரப்பினால் நாங்கள் பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம்.
9)ஓப்பந்த பணியாளர்களை நியமிப்பது தவிர்த்து மருத்துவ பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு எண் 8/2016 ல் மீதமுள்ள 6955 பேருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பிப்ரவரி 23, 2021 அன்று DMS வளாகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தோம்.
10)மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் ஆய்வக நுட்புனர் நிலை2 பணியிடங்களுக்கு 8/2016 அறிவிப்பிற்கு பிறகு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
11)மருத்துவத் துறையில் ஆய்வக நுட்புனர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகவே ஆய்வக நுட்புனர் நிலை பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு எண் 8/2016 ல் மீதமுள்ள 6955 பேருக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
****