“Born2Win” அமைப்பின் முதன்மை முயற்சி: திருநங்கை மற்றும் திருநம்பி அழகி – அழகன் பட்டம் வழங்கும் விழா சென்னை மாநகரில்!
சென்னை, அக்டோபர் 4, 2025: திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூக மேம்பாட்டுக்காக கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் "சாதிக்க பிறந்தவர்கள் சமூக அமைப்பு – Born2Win", இந்த ஆண்டு ஒரு முன்னோடியான நிகழ்வை நடத்தவுள்ளது. தென்னிந்திய அளவில் முதன்முறையாக, திருநங்கை மற்றும் திருநம்பி அழகிப்போட்டி ஒரே மேடையில் நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவின் முக்கிய அம்சங்கள்: திரு தென்னிந்திய திருநம்பி அழகன் ராஜா 2025 (பருவம் – 1) & மிஸ் தென்னிந்திய திருநங்கை அழகி ராணி 2025 (பருவம் – 9). இவை இரண்டும் ஒரே மேடையில், ஒரே நாளில், வரும் அக்டோபர் 8, 2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இது தமிழ்நாட்டில் மற்றும் தென்னிந்தியாவில் நடைபெறும் முதல் அகில இந்திய அளவிலான திருநர் மற்றும் திருநங்கை அழகிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Youtube Video Coverage Link 👇
Born2Win அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான ஸ்வேதா சி, “இந்நிகழ்ச்சி சமூக அங்கீகாரம், திறன் மேம்பாடு மற்றும் கல்வி – வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கியமான படியாக அமையும்,” எனக் கூறினார்.
Born2Win, 2013-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை:
திருநர், திருநங்கைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, சட்ட உதவி போன்ற துறைகளில் வழிகாட்டி செயல்பட்டு வருகிறது.
வருடந்தோறும் நடைபெறும் "தென்னிந்திய திருநங்கை ராணி" பட்டமளிப்பு விழாவை இப்போது "திருநம்பி ராஜா" பட்டத்துடன் விரிவுபடுத்தியுள்ளது.
இதுவரை 30-க்கும் மேற்பட்ட திருநர்களுக்கு விரிவான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விழா, திருநர் மற்றும் திருநங்கைகளின் புதிய அடையாளங்களை சமூகத்தில் உருவாக்கும் ஒரு பெரும் முயற்சி.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
Born2Win Social Welfare Trust
📧 Email: born2winsocialtrust2013@gmail.com
🌐 Website: www.borntwowin.in
****