சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியார் சகோதரர்களுக்கு சிலை நிறுவிய புல்லட் டி.ஜி. சுரேஷ் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டு விழா – சென்னையில் சிறப்பாக நடைபெற்றது
சென்னை, செப்டம்பர் 28, 2025: ஆந்திர மாநிலம் சித்தூரில் தமிழ் வரலாற்றின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், மாமன்னர் மருதுபாண்டியார் சகோதரர்களுக்கு சிலை நிறுவிய ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைவருமான புல்லட் டி.ஜி. சுரேஷ் அவர்களின் அருமையான பணியை பாராட்டும் விதமாக, ஒரு சிறப்புப் பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அதன் சார்புடைய அறக்கட்டளைகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர், வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் தலைமையேற்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பூட்டினார்கள்.
Event Highlights Youtube Video link 👇
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இரா.கற்பூரப்பாண்டியன், கே.கணேசன், எஸ். இராஜரெத்தினம், முன்னாள் ஜ.பி.எஸ் அதிகாரி எஸ்.வனிதா, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் பாஸ்கர் மணிமாறன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தின் முன்னாள் நிதி ஆலோசகர் எம். மலைச்சாமி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் ஜி.சேகர், தஞ்சை தமிழ் பல்கலைகழக செனட் உறுப்பினர் ஜி.சரவணக்குமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க முன்னாள் தலைவர் எம்.கெளரிசங்கரன், கே வி டி பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் டி.செந்தமிழ் பாரி ஆகியோரை சென்னை எம்.எம்.ஏ.எஸ் கூட்டமைப்பின் தலைவர் அரிமா. ஏ.வி.குமரேசன் வரவேற்று புல்லட் டி.ஜி. சுரேஷ் அவர்களின் சமூக நல பணிகள் குறித்து பாராட்டிப் பேசினார்.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வரும் அரிமா ஏ. சரவணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சியை எம்.எம்.ஏ.எஸ் கூட்டமைப்பின் செயலாளர் ஆர். முத்துகுமார் அவர்கள் ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கினார்.
இந்த விழா, சமூக பணிகளுக்கு திருப்பிமுகம் காட்டும் விதமாகவும், நம் சமூகத்தைச் சேர்ந்த நற்பணியாளர்களின் பணிகளை மதிப்பதற்கும் ஒரு முன்னோடி நிகழ்வாக அமைந்தது.
****