மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு
சென்னை, 03,அக்டோபர், 2025: மக்கள் படை கட்சியின் பொதுச் செயலாளர் திரு. V. ராம்பிரகாஷ் MCA., இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் சார்பாக முதல்கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது: “யாரும் புறக்கணிக்கப்படாத சமுதாயம் உருவாகவேண்டும். இயன்றதைச் செய்வோம், சமூகம் மேம்படச் செய்வோம் என்பதே எங்கள் உறுதி. சம வாய்ப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான ஜனநாயகத்தின் நோக்கில் மக்கள் படை கட்சி செயல்படுகிறது,” என்றார் அவர்.
Press meet Youtube Video link 👇
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளின் நிலையை உயர்த்தும் பணியில் கட்சி சிறப்பு கவனம் செலுத்தும் என்றும், பணவல்லமை மற்றும் படைவல்லமை ஆகியவை ஜனநாயகத்தைக் கெடுக்கின்றன என்ற கருப்பொருளில், அவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், தகுதி அடிப்படையில் அனைவருக்கும் வசதிகள் உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கட்சியின் முக்கிய நோக்கங்கள்:
- இலவச கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும்
- சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு ஆதரவு, வாழ்க்கைத்தர மேம்பாடு
- தமிழக நதிகளை இணைக்கும் திட்டம்
- கடனற்ற தமிழகம்
- இயற்கை விவசாய முன்னேற்றம்
- லஞ்சம், ஊழல், போதை இல்லா சமூக நோக்கம்
- அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- மக்கள் குறைகளை தீர்க்க “மக்கள் படை குழு” அமைத்தல்
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் (2026 சட்டமன்றத் தேர்தல்): திருப்பூர் தெற்கு – திரு. தனசேகரன்; போடிநாயக்கனூர் – திரு. மணி; ராயபுரம் – திரு. ஜெகன் நாதன்
“இவர்கள் அனைவரும் சமூக சேவையில் அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர். எனது வாழ்த்துக்களையும், மக்கள் ஆதரவையும் பெற்றிட நான் நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார் பொதுச் செயலாளர்.
****