பேக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவும் மயிலை மலர் ஆண்டு விழாவும்
சென்னை: குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எண்ணிலடங்கா எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்து, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மயிலை மலர் இணையதள குழுவின் எட்டாவது ஆண்டு விழாவும் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவும் 05.09.25 அன்று கோடம்பாக்கம் ,அஜந்தா டவர், 'படைப்பு', தரைத் தள அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
எழுதவும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட புதிய எழுத்தாளர்களின் கனவை நனவாக்க பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது. எழுத்தார்வம் உள்ள மூத்த குடிமக்களை ஊக்குவித்து அவர்கள் எண்ணங்களை வடிவமைத்து புத்தகமாக வெளியிட உதவி செய்கிறது.
எழுத்தாளர்களை பாராட்டி பேசிய திருமதி வேதா கோபாலன் அவர்கள்,புத்தகத்தில் எழுதப் பட்டுள்ள கருத்துகளை அழகாக எடுத்து உரைத்தார். மயிலை மலரும், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்களுக்கு பத்மபூஷன் திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
பேக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் உமா அபர்ணா அவர்கள் தன்னுடைய உரையில் எப்படி இந்த கால குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லும் கதைகளை தங்கள் புத்தகத்தின் மூலம் எடுத்துச் செல்கிறது பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் என்பதைப் பற்றியும், அதன் வளர்ச்சிகளையும், குறிக்கோள்களையும் பற்றி அழகாக எடுத்துரைத்தார்.
மயிலை மலர் குழுவின் தலைவர் திருமதி. கிரிஜா அவர்கள், குழுவின் தனித்தன்மையையும், வருடாந்திர அறிக்கையும் பற்றி பேசினார். அதன் பிறகு சிறந்ததொரு பட்டிமன்றம் நடை பெற்றது. மயிலை மலர் பாடல் பாடப் பட்டது.
Community reach Head திருமதி உஷா கண்ணன், School reach Head திருமதி வனஜா முத்து கிருஷ்ணன், Ground event Head திருமதி ருக்மணி வெங்கட்ராமன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்தனர். மயிலை மலர் குழுவைச் சேர்ந்த திரு நந்தகுமார் அவர்கள் நன்றி உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப் பட்டது.
****




