KRT CAREER ACADEMY சார்பில் TNPSC குரூப் 2 & 2A முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை:  KRT CAREER ACADEMY சார்பில் TNPSC குரூப் 2 & 2A முதன்மை தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சியை திரு.உ. சகாயம் ஐ.ஏ.எஸ் (விருப்பஓய்வு) அவர்கள் 20.11.2022 அன்று தொடங்கி வைத்தார். 

Inauguration Video👇👇

அது சமயம் அவர் பேசும் போது " இந்த நிகழ்ச்சிக்கு ஐயா ஓ.பி.ராமசாமி ரெட்டியார் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் ஐயா அவர்கள் பெயரை சொல்லி அழைத்த உடனே நான் இதில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்தேன். காரணம் அத்தகைய ஒரு  நேர்மையை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தவர் ஓ.பி.ஆர். அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. இன்று ஓ. பி. ஆர். - ஐ போன்ற நேர்மையானவர்களை நாம் பார்ப்பது அபூர்வமாக உள்ளது. அவரது ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும். அது உங்களது கைகளில் தான் உள்ளது. இளைஞர்களாகிய உங்களால் தான் அது முடியும். அத்தகைய மிகச் சிறப்பான ஆட்சியை இன்றைய இளம் தலைமுறையினர் தான் தர முடியும். 

IAS படிப்பிற்க்கான கல்வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

எனவே  அதற்கு நம்பிக்கையோடு குரூப் 2 முதன்மைத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளுங்கள். அது உங்களால் முடியும்.நாங்கள் படிக்கும் போது இது போன்ற வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லை . அரசு பயிற்சி நிறுவனம் ஒன்று தான் இருந்தது. அதிலும் சீட் கிடைப்பது அரிது. அதுவும்  ஏழைகளுக்கு  எட்டாக்கனியாக இருக்கும். இப்போது ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை  நடத்திவரும் கே.ஆர்.டி. கேரியர் அகாடமி உங்களுக்கு மிகச்சிறந்த  வாய்ப்பாக அமைந்துள்ளது வரவேற்புக்குறியது.

(L to R) உ. சகாயம் ஐ.ஏ.எஸ் (விருப்பஓய்வு); வீ.செல்வராஜூ, இயக்குனர்,  கே.ஆர்.டி கேரியர் அகாடெமி

அதே வேளையில் இலவசமான தரமான பயிற்சியை வழங்குவது மிகவும் பாராட்டுக்குறியது. அரசுத் துறையில் அதிகாரி ஆகி நேர்மையாக இருந்து இன்றைய இளைஞர்கள் செயல்படாலே போதும் தேசம் வளர்ச்சி அடைந்துவிடும். நாம்  குஜராத் போல, பீகார் போல,உத்திரபிரதேசம் போல வளரவேண்டும் என்பது இல்லை. தமிழகத்தைபோல வளரவேண்டும் என அடுத்தவர்கள் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். சுவிட்சர்லாந்து போல,ஜப்பான் போல தமிழகம் வளரவேண்டும்.

அத்தகைய இலக்கை நோக்கி பயணம் செய்ய சிறந்த திறமையான அதிகாரியாக இருந்தால்மட்டும் போதாது. நேர்மையானவராக, நெஞ்சுரம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இங்கே கே. ஆர். டி. கேரியர் அகாடமி-யை பார்க்கின்ற போது அந்த நம்பிக்கை எனக்குவந்திருக்கிறது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை கொண்டவர்களாக இங்கே நீங்கள் உருவாக்க படுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனை  ஓபிஆர் நினைவுத்தொண்டு  அறக்கட்டளை நிர்வாகிகளும் குறிப்பாக இயக்குனர் செல்வராஜூ அவர்கள் செய்து முடிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. 

அரசு அதிகாரி ஆக திட்டமிட்டு செயல்பட்டால் போதும் வெற்றி பொற்றுவிடலாம். ஆனால் உங்கள் லட்சியம் நேர்மையான வாழ்க்கை என்பதாக அமைத்துக் கொண்டு செயல்பட்டால் நீங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எனவே  இலக்கை அடையுங்கள் அதற்கு இன்றே திட்டமிடுங்கள் வாழ்க்கைக்கான லட்சியத்தையும் அடையுங்கள் வாழ்விலும் வெற்றி பெறுங்கள்" என்று வாழ்த்தினார்.

****

Recent Posts