சபரிமலையின் புனித பாரம்பரியத்தை காக்க ஒன்றுபட்ட போராட்டம்; அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா மிஷன் அறிவிப்பு
சென்னை, டிசம்பர் 26, 2025: தற்போது சபரிமலையில் பகவான் ஸ்ரீ ஐயப்பனின் தங்க உடமைகள் தொடர்பாக நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து, அகில உலக ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் ஆசிரமம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலைவர் நித்யோகி ராஜமங்களம் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்
இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், சபரிமலையின் புனிதமும் மரபும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. திருவாங்கூர் தேவசம் போர்டை கலைத்து, பக்தர்களின் பிரதிநிதித்துவத்துடன் புதிய நிர்வாகக் குழு அமைக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
Press meet Youtube Video link 👇
இக்குழுவில், பந்தளம் ராஜா குடும்பம், சபரிமலையின் வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய குடும்பங்களின் பிரதிநிதிகள், ஹரிவராசனம் பாடல் வழியாக உலகளாவிய பக்தியைப் பரப்பிய மரபின் வாரிசுகள், மற்றும் அகில இந்திய அளவில் ஐயப்ப பக்தர்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.
இதனை முன்னெடுத்து, அகில உலக ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் ஆசிரமம் தலைவர் ராஜமங்களம் அவர்களின் தலைமையில், ஐயப்ப பக்தர்கள் ஒரு கோடி கையொப்பங்கள் திரட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமர் அவர்களிடம் மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஐயப்ப பக்தர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுவாமியே சரணம் ஐயப்பா!!
****
