Traffic Ramaswamy Foundation – நில எடுப்பு மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்கள் குறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள்
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், Traffic Ramaswamy Foundation சார்பில் முக்கியமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் நில எடுப்பு சட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. ஆனால், அந்த நிலங்களில் பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதுடன், பெரும்பாலான நிலங்கள் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இந்திய அரசியலமைப்பின் ஆர்டிகல் 14 – அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற அடிப்படையில், அரசு இவ்வாறு பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் முன்னாள் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்க High-Level Expert Committee மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்படுகிறது.
Press meet Youtube Video Coverage Link 👇
இது போன்ற முன்மாதிரியான நடவடிக்கையாக, கடந்த ஆண்டு வீட்டு வசதி துறை unused land-ஐ முன்னாள் உரிமையாளர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆட்சிக்காலங்களில் (2004–2012) unutilized land சட்டப்படி அல்லது நீதிமன்ற ஆணை இல்லாமல் மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்பட்ட சம்பவங்களும், அது தொடர்பான ஊழல்கள் பற்றிய விவரங்களும் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிடப்பட்டது.
அத்துடன், 2012 G.O.Ms No.146 (Industries Dept) மற்றும் பிற ஆவணங்களில் காணப்படும் விதமான தப்பான நில ஒதுக்கீடுகளும் இந்நிலையில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
இதனால், தற்போது நல்லாட்சி வழங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்து, பாரபட்சம் இல்லாமல், அனைத்து துறைகளிலும் unused lands-ஐ முறையாக ஆய்வு செய்து, உரிய வழியில் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்க Expert Committee அமைக்க வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்.
இந்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் குறையும், மற்றும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தோம்.
முக்கிய கோரிக்கைகள்:
1. Unused lands–ஐ மீண்டும் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
2. Expert Committee அமைத்து, முறையான ஆய்வு செய்ய வேண்டும்.
3. அனைத்து துறைகளும் ஆர்டிகல் 14 படி பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும்.
4. முந்தைய ஆட்சிகளில் நடந்த ஊழல்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
****