பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழா

சென்னை: குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள்  வரை எண்ணிலடங்கா எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்து, தனக்கென்று ஒரு  முத்திரையை பதித்துள்ள பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மயிலை மலர் இணையதள குழுவின் எட்டாவது ஆண்டு விழாவும் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவும் 05.09.2025  அன்று கோடம்பாக்கம்,.அஜந்தா டவர், 'படைப்பு', தரைத் தள அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழா; பத்மபூஷன் கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி பாராட்டு

மதிப்புக்குரிய பத்மபூஷன், கலைமாமணி திரு டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் பதினோரு மூத்த எழுத்தாளர்கள் எழுதிய 
'இழைகள் இணைத்த துகில்கள்' புத்தகத்தை வெளியிட திருமதி சோபனா ரமேஷ் அவர்களும் திரு. சின்னமுத்து அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

Youtube Video link 👇 

மற்றும் 'முத்துச்சிதறல்' என்ற குழந்தைகள் சிறுகதை தொகுப்பை, 
திருமதி வேதா கோபாலன் வெளியிட பத்மபூஷன் திரு . டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களும் திருமதி ராஜம் சியாமளா, திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.


எழுதவும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற  ஆர்வம் கொண்ட புதிய எழுத்தாளர்களின்  கனவை நனவாக்க பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது. எழுத்தார்வம் உள்ள மூத்த குடிமக்களை ஊக்குவித்து அவர்கள் எண்ணங்களை  வடிவமைத்து புத்தகமாக வெளியிட உதவி செய்கிறது.

எழுத்தாளர்களை பாராட்டி பேசிய திருமதி வேதா கோபாலன் அவர்கள், புத்தகத்தில் எழுதப் பட்டுள்ள கருத்துகளை அழகாக எடுத்து உரைத்தார். மயிலை மலரும், பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதை  போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்களுக்கு பத்மபூஷன் திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

பேக்கிடெர்ம்டேல்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் உமா அபர்ணா அவர்கள் தன்னுடைய உரையில் எப்படி இந்த கால குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லும் கதைகளை தங்கள் புத்தகத்தின் மூலம் எடுத்துச் செல்கிறது பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் என்பதைப் பற்றியும்,அதன் வளர்ச்சிகளையும், குறிக்கோள்களையும் பற்றி அழகாக எடுத்துரைத்தார். மயிலை மலர் குழுவின் தலைவர் திருமதி. கிரிஜா அவர்கள், குழுவின் தனித்தன்மையையும், வருடாந்திர அறிக்கையும் பற்றி பேசினார்.

பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம், தனது சிறப்பு கௌரவ பிரதிநிதி ஐமாலியன் விருது பெற்றவர், அன்னதான செம்மல், இந்த புத்தகங்கள்  உருவாக உறுதுணையாக இருந்தவர், பல குழந்தைகளின் கல்விக்கு உதவி புரிபவர், ரோட்டரியன்  முனைவர் திரு.K. ஸ்ரீனிவாசன் ஊக்கத்தாலும், பேக்கிடெர்ம்டேல்ஸ் சி.இ.ஓ  லஷ்மி ப்ரியா  அவர்களின் உறுதுணையோடும் விழா இனிதே நிறைவேறியது.

Community Reach Head திருமதி உஷா கண்ணன், School Reach Head திருமதி வனஜா முத்துக்கிருஷ்ணன்,  Ground Event Head திருமதி ருக்மணி வெங்கட்ராமன் ஆகியோர்  தங்கள்  பங்களிப்பை  செவ்வனே அளித்தனர்.

திரு. நந்தகுமார் அவர்களின் நன்றி நவிலல் உரையுடன் இனிதாக விழா நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து அறுசுவை உணவு உண்டு நாவினிக்க மனம் குளிர  விழா இனிதே நிறைவேறியது.

****

Popular posts from this blog

Billroth Hospitals Unveils Advanced 'Institute of Robotic Surgery' to Boost Accuracy & Cut Costs

Lancor Expands Portfolio Across Senior Living, Premium Urban Homes & Suburban Growth

ALLEN Career Institute Presents SOPAN 2025; Felicitates Engineering, Medical & Olympiad Toppers

Bhagawan Sri Sathya Sai Baba Centenary Celebrations at Advocate M.K. Govindan's Residence; 317th Study Circle

Toscano & SALT Indian Restaurant Debut at Brigade World Trade Centre OMR Chennai! Italian Flair Meets Indian Soul