திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு செப் 13, 14 ல் நடைபெறுகிறது
திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு 2 நாட்கள் வரும் செப்டம்பர் 13ந் தேதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மற்றும் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜூயர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ சக்தி அம்மா, ஸ்ரீநாராயணிபீடம் ஸ்ரீபுரம், தங்க கோவில் வேலூர், அருள்திரு செந்தில்குமார் அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம், ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரத்தினகிரி, ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கலவை ஆகிய மாபெரும் ஆன்மீக மகான்கள் தலைமையில் 2 நாள் மாநாடு திருவண்ணா மலையில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.
Video Coverage Link :
அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், குருமார்கள், ஆன்மீக பெரியோர்கள், செவ்வாடை தொண்டர்கள் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கு நினைவுப்பரிசும், கவுரவித்தலும் நடைபெறும். மாலையில் இளையராஜா மகன் கார்த்திக் ராஜாவின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும். உலக கலாச்சார ஒற்றுமை தினமாக செப்டம்பர் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை ஒருங்கிணைந்து நடத்துபவர் இளவரசு பட்டம் டாக்டர் பி.டி.ரமேஷ்குருக்கள், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை மற்றும் புரவலர் ஜெகதீஷ் கடவுள் மற்றும் விழா குழுவினர்.
****