பிறந்த நாள் விழா | 10,000 நபர்களுக்கு ஹெல்மெட்களை வழங்கி சாதனை படைத்த கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசேகர்

சென்னை: கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவரும்  நிர்வாக இயக்குநருமான டாக்டர் எஸ். ராஜசேகர் பிறந்த நாள் விழா ஜூன் - 04 அன்று சென்னை விருகம்பாக்கம் சென்னை மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. 

பிறந்த நாள் விழா | 10,000 நபர்களுக்கு ஹெல்மெட்களை வழங்கி சாதனை படைத்த கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகர்

கடந்த 15 ஆண்டுகளாக ஜூன்-4ஆம் தேதி இவருடைய பிறந்தநாளில்   தலைகவசம் உயிர் காக்கும் கவசம் என்ற நோக்கில் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறார். அதே போல் இந்த ஆண்டும் 500 நபர்களுக்கு தலைகவசத்தை வழங்கினார். இதுவரையில்  10,000 நபர்களுக்கு ஹெல்மெட்களை வழங்கி சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Press meet Youtube Video link 👇 

இப்பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக  விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தமிழ்நாடு வணிகங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் அ. ஹென்றி,  இந்திய  பத்திரிகையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தேசியத் தலைவர் எஸ்.ராஜேந்திரன்,  அண்ணாநகர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் ரவி ஆகியோர்   கலந்து கொண்டு தலை கவசத்தின் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். 

மேலும் இருசக்கர பயணத்தின் போது ஒட்டுநர் உரிமம், வாகன காப்பீடு, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தலின் அவசியத்தை பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.

****

Popular posts from this blog

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

L&T Technology Services Global EI OpenHack 2026 Sparks the Next Wave of AI-Native Engineering Solutions