தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

பத்திரிக்கை ஊடகச் செய்தி

சென்னை, டிசம்பர் 05, 2024: தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம் கடந்த 10.02.2024 அன்று 5வது மாநில மாநாடு நடந்த போது மாண்புமிகு அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் மற்றும் நிலஅளவைத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர் முன்னிலையில் 28 கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு கோரிக்கை மாநாடாக நடத்தப்பட்டது. 

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

இம்மாநாட்டில் நிலஅளவைத்துறை களப் பணியாளர்கள் 1500 பேருக்கு மேலாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிபெற செய்தனர். அம்மாநாட்டில் கொடுத்த 28 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் நிறைவேற்றித்தருவதாக மரியாதைக்குரிய நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்.

Press meet Youtube Video 👇 

கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்த நிலையில் நாளது தேதி வரை ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றித்தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். தொடர்ந்து மரியாதைக்குரிய நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அவர்களை சங்கத்தின் சார்பிலும், நாங்கள் அங்கம்வகிக்கக்கூடிய வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பிலும் சந்தித்து வாக்குறுதி அளித்த 8 கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்த போதும் நாளது தேதி வரை நிறைவேற்றித்தரவில்லை எனவே, தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது தொடர்பான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வருகின்ற 19.12.2024 அன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு நிலஅளவைத்துறை இயக்குநர் அலுவலகத்தின் முன்பாக நடைபெறும் 6T60T தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நிலஅளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நிறைவேற்றாத கோரிக்கைகளை நிறைவேற்றி தரச்சொல்லி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்படும்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செவிமெடுத்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிதரவில்லையெனில் வருகின்ற ஜனவரி 8, 2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

****

Recent Posts