பேக்கி டெர்ம் டேல்ஸ் மற்றம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் சார்பில் 62 நூல் வெளியீட்டு விழா


 
சென்னை: பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனமும், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் நிறுவனமும் இணைந்து வழங்கிய புத்தக வெளியீட்டு விழா சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 18.08.2024 அன்று காலை மிக விமரிசையாக நடை பெற்றது.
ஒரு வருடத்தில் 52 எழுத்தாளர்கள் எழுதிய 62 புத்தகங்களின் (அனைத்து எழுத்தாளர்களும் மூத்த குடிமக்கள்), திருமிகு.  Dr J. ராதாகிருஷ்ணன், IAS Additional Chief Secretary, Cooperation, Food and Consumer  Protection, Govt. Of Tamilnadu அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

திருமிகு . J. ராதாகிருஷ்ணன் IAS, திருமிகு. பாமதி, IAS retd திருமிகு. ராஜேந்திரன் IAS retd அவர்கள் புத்தகங்களை வெளியிட திருமிகு பிரசன்ன தேவதாஸ், புஸ்தகா நிறுவனர், திருமிகு. சாந்தி ஜெகத்ரட்சகன்,  பொதிகை நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.,

திருமதி பாமதி IAS Retd, Secretary, Govt of India, திருமிகு. ராஜேந்திரன் IAS, retd கலெக்டர், திருமிகு. பிரசன்னா தேவதாஸ் புஸ்தகா நிறுவனர், திருமிகு சாந்தி ஜெகத்ரட்சகன், பொதிகை தொகுப்பாளர், திருமிகு. டாக்டர்.சரண்யா ஜெயக்குமார், Educational Psychologist, திருமிகு கிரிஜா ராகவன், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர், திருமிகு வேதா கோபாலன், எழுத்தாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து எழுத்தாளர்களை ஊக்குவித்து பேசி  விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

திருமிகு J. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுத்தாளர்களை பாராட்டி பேசும்போது, முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்க சக்தியே, இதுபோல் மேலும் பல நூல்கள் அனைத்து பாலரையும் சென்று அடையும்படி படைப்புகள் உருவாக்க வேண்டும் என்று கூறியதுடன் அல்லாமல் அவர் அன்னை முதிர்ந்த வயதில் கதைகள் எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.

சிறப்பு விருந்தினார்கள் ஒவ்வொருவரும் அவர்களது உரையில்   இந்த வயதில் மூத்த இளைய எழுத்தாளர்களின் ஆர்வத்தை பாராட்டி பேசினார்கள். விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருநங்கை. ஸ்வேதா சுதாகரும் , மாற்றுத் திறனாளி மோ. ரவீந்திரன் அவர்களும் ஆவார்கள்.

16 புத்தகங்களுக்கு மேல் எழுதி பெண்ணியம், சமூக நலம், ஆன்மிகம்,நகைச்சுவை சரித்திரம் ஆகிய துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

முதன்முறையாக சிறந்த பெண்ணிய எழுத்தாளராக விருது பெற்ற ' உஷா கண்ணன் கூறியது ' ஊன்று கோல் பிடிக்கும் வயதில் எழுது கோல் பிடித்து எழுதி இன்று கோப்பை வாங்கியது வாழ்வில் மறக்க முடியாத தருணம் '. இது ஒரு பொன்னாள் என்று கூறினார். அது மட்டுமின்றி ' அற்றைத் திங்கள் ' என்ற தனி புத்தகமும் எழுதியது சிறந்த அனுபவம் என்றார்.

இவரைப் போல் பல எழுத்தாளர்கள் அஷ்டலக்ஷ்மி குழு இணைந்த கைகள் குழு, மலர் வனம் குழு,கண்ணன் குழு, பாசமலர் குழு என்று பல குழுக்களின் பங்களிப்பே 62 புத்தகங்கள். அநேக  முன்னணி எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துக் கொண்டு  நிகழ்வை சிறப்பித்தனர். புத்தக வெளியீட்டிற்கு பிறகு அனைத்து புத்தகங்களும் அண்ணா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

விருந்தினர்களை  வரவேற்று பேசும்போது, உமா அபர்ணா, COO, பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனர் தன்னுடைய உரையில் , மூத்த குடிமக்களுக்கு எழுத வாய்ப்பு அளித்து அவர்களின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர கிடைத்த ஒரு சிறந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். தன் வாழ்வில் இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டார். 

மாற்றுத் திறனாளி மோ. ரவீந்திரன் தன் கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்து அனைவரையும் நெகிழ்வித்தார். பாரதியாரின் ' நெஞ்சுக்கு நீதி ' பாடலுடன் தொடங்கிய விழா உஷா கண்ணன் அவர்களின்  நன்றி நவிலல்  உடன்  நிறைவு பெற்றது. 'அன்னதா சுக்கினோ பவந்து' விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது.

****

Recent Posts