நவீன விவசாய புரட்சியின் மூலம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 12 லட்சம் ரூபாய் தரப்படும் கிங்மேக்கர் நிறுவனர் ராஜசேகர் பேட்டி


ஜனவரி 04, 2024: சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் கிங்மேக்கர் நிறுவனர்  ராஜசேகர் தலைமையில்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கிங்மேக்கர் நிறுவனத்தால் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள நவீன விவசாய புரட்சி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிங்மேக்கர்ஸ்  நிறுவனர்  ராஜசேகர்  கிங் மேக்கர்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் தங்கள் வாடிக்கையாளர்கள் 95 ஆயிரம் பேர் தங்கள் நிறுவனத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

Press meet youtube video link 👇 

அதனைத் தொடர்ந்து கிங்மேக்கர்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு உதவிடும் விதமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம்  மொத்தமாக 250 ஏக்கர் பசுமை குடில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்  இதேபோல் 250 விவசாயிகளிடம் தலா ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

தங்களிடம் ஒரு ஏக்கர்  நிலத்தை விவசாயிகள் லீசுக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என கூறினார்

தங்களிடம் விவசாயிகள் நேரில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தங்களது நவீன விவசாய புரட்சி குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்

பசுமை குடில் விவசாய முறை இஸ்ரேல், உக்கிரன் உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை இந்தியாவிலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என கூறினார்

இதற்காக கிங் மேக்கர்ஸ் நிறுவனம் GRT (Green Revolution Tech Agro Farm) என்கிற அமைப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்

****

Recent Posts